இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை வருகை

351 0
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஒரு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (18) இலங்கை வந்துள்ளார்.

அவர் இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் மற்றும் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலீடுகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட பிரதான வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

கடந்த வாரத்தில் வௌியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்தியாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர் டோவால் இந்நாட்டிற்கு விஜயமொன்றை மேற்கொள்ள தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.