பொதுத்தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானம்!

283 0

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுதேர்தலில் 3 இல் 2 பெரும்பான்மை பெறுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கிருந்தது.

இதன்போது இரு தரப்பிற்கும் இடையில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தன.

குறிப்பாக நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாகவும் ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.