மிரிஹான பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று (14) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் காயமடைந்தவரை களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

