ரஞ்சன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை

341 0
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றைய (15) தினம் நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க நேற்று (14) மாலை 6.15 அளவில் மாதிவல பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் அவர் கொழும்பு குற்றதடுப்பு பிரிவுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவிற்கு அமையவே ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதிபதிகளின் நடவடிக்கைகளில் தலையிட்டமை மற்றும் அச்சுறுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரின் உத்தரவிற்கு அமையவே ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.