ஜனாதிபதிக்கு எந்தளவு பலம் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய சக்திமிக்க பாராளுமன்றம் வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஹிங்குராங்கொட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ பாராளுமன்றத்தை மாற்றி புதிய பாராளுமன்றம் ஒன்றை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிடின் ஜனாதிபதிக்கு எந்தளவு பலம் இருந்தாலும் சேவை செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

