முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் ரூ.6,608 கோடியில் 15 தொழில் திட்டங்கள்: முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் ஒப்புதல்

41 0

தமிழகத்தில் ரூ.6,608 கோடி முதலீட் டிலான 15 தொழில் திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி தலைமை யிலான முதலீட்டு வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் தொழில் முதலீடு களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. இதன் ஒருபகுதியாக முதல் வர் பழனிசாமி தலைமையிலான முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றை சாளர அனுமதிகளுக்கான உயர்மட்டக்குழுவின் 2-வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

முன்னதாக கடந்தாண்டு நவ.1-ம் தேதி நடைபெற்ற முதல் கூட்டத்தில் ரூ.8,120 கோடி முதலீடுகளில், 16 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 21 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட் டன. தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது கூட்டத்தில் பல்வேறு நிலை களில் இருந்த 15 தொழில் திட்டங் கள் விவாதிக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது.

 

இதன்மூலம் ரூ.6,608 கோடிக் கான தொழில் முதலீடுகள் முழுமை யாக செயல்பாட்டுக்கு வந்து, 6,763 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் விரைவாக உருவாகும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

இத்திட்டங்கள் தூத்துக்குடி, திரு வள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, வேலூர் என தமிழகத்தின் பல பகுதிகளில் செயல்படுத்தப்படும்.

மேலும், இக்கூட்டத்தில் ஒற்றைச் சாளர முறையில் வழங்கப்பட்ட தொழில் அனுமதிகள், பெரும் தொழில் முதலீட்டுத் திட்டங்கள் தொடர்புடைய நிலுவை திட்டங் கள், தொழில் தொடங்குவதை எளிதாக்கிட தேவையான சீர்திருத் தங்கள், வணிகம் செய்தலை எளி தாக்குதல் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தொடர்புடைய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார், ஊரக தொழில்துறை அமைச்சர் பி.பெஞ்சமின், தலைமைச் செயலர் கே.சண்முகம், தொழில்துறை செயலர் நா.முரு கானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.