முஷாரப் மரண தண்டனை ரத்து: லாகூர் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

210 0

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ சர்வாதிகார ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் ‘அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’ என்று கூறி ரத்து செய்துவிட்டது.

தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் முஷாரப்புக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பதாக மரண தண்டனை விதித்தது. ஆனால் இந்தத் தண்டனை ஒரு அதிர்ச்சியாகவே அங்கு பார்க்கப்பட்டது, காரணம் ராணுவத் தலைமை ஒருவர் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்படுவது முதல் முறை என்பதால்.

ஆகவே அது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று லாகூர் உயர் நீதிமன்றம் முஷாரப் மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது. துபாயில் தலைமறைவாக இருக்கும் முஷாரப் இந்த மரண தண்டனை விதிப்பை பழிவாங்கும் அரசியல் என்று விமர்சிக்க பாகிஸ்தான் ராணுவம் ஏமாற்றம் தெரிவித்தது.

லாகூர் உயர் நீதிமன்றம் மரண தண்டனைத் தீர்ப்பை சட்ட விரோதம் என்று அறிவித்ததோடு, “புகார் பதிவு செய்தது, நீதிமன்ற உருவாக்கம், அரசு வழக்கறிஞர்கள் தேர்வு அனைத்தும் சட்ட விரோதம் ஆகவே அந்தத் தீர்ப்பு செல்லுபடியாகாது’ என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

 

இனி முஷாரப் மீது புதிய வழக்கைத்தான் தொடுக்க முடியும். அதுவும் அமைச்சரவை அனுமதி பெற்ற பிறகுதான் வழக்கு தொடர முடியும்.

2013ம் ஆண்டு தொடங்கிய முஷாரப்புக்கு எதிரான தேசத்துரோக வழக்கின் பின்னணி என்னவெனில் 2007-ல் அரசியல் சாசனத்தை ரத்து செய்து எமர்ஜென்சி பிறப்பித்தார் முஷாரப், இந்த வழக்கு பல இடையூறுகளுடன் நடந்து வந்தது. கடைசியில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் அது சட்ட விரோதம் என்று தற்போது முஷாரப் மரண தண்டனையை ரத்து செய்துள்ளது லாகூர் உயர் நீதிமன்றம்.