16-ந்தேதி இறைச்சி கடைகளுக்கு விடுமுறை

42 0

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வரும் 16-ந்தேதி அனைத்து இறைச்சிக் கூடங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டாம் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் அனைத்தும் வருகின்ற 16-ந்தேதி(வியாழக்கிழமை) மூடப்படுகின்றன. இதேபோல், ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி

எனவே, வரும் 16-ந்தேதி அனைத்து இறைச்சிக் கூடங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.