இலங்கை சிறந்த முகாமைத்துவத்துடன் செயற்பட வேண்டும்- சஜித்

269 0

அமெரிக்கவுக்கும் ஈரானுக்கும் இடையில் யுத்தம் ஏற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில் இலங்கை சிறந்த முகாமைத்துவத்துடன் செயற்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தேசிய பாதுகாப்பு குறித்தும் தற்போதைய அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவிஸ்ஸவெல்ல பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.

இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசிய கட்சிக்குள் மறுசீரமைப்பு நடவடிக்கை இடம்பெறாமல் முன்னோக்கி பயணிக்க முடியாது என கூறினார்.