அமெரிக்காவில் மரணம் அடைந்தவரின் கருப்பையை தானமாக பெற்ற பெண் ஒருவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா பகுதியை சேர்ந்த பெண் ஜெனிபர் கோப்ரெட்(33). பிறவியிலேயே அவருக்கு கருப்பை இல்லை. இந்த நிலையில் இவருக்கும், டிரியூ என்பவருக்கு திருமணம் நடந்தது.
அதன் பின்னர் இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினர். எனவே ஜெனீபருக்கு இறந்த பெண்ணின் கருப்பை தானமாக பெறப்பட்டது.
இதற்கான ஆபரேசன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 மணி நேரம் நடைபெற்றது. கருப்பை பொருத்தப்பட்டு, பூரண குணமடைந்த பின்னர் ஜெனீபர் கர்ப்பம் அடைந்தார்.
இறந்த பெண்ணிடம் இருந்து தானமாக பெற்ற கருப்பை உதவியுடன் ஜெனீபர் குழந்தை பெற்றது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
ஏனெனில் தற்போது உலகம் முழுவதும் உயிருடன் இருக்கும் பெண்ணிடம் கருப்பை தானமாக பெற்று 70 பேர் குழந்தை பெற்றுள்ளனர். 2 பேர் மட்டுமே இறந்த பெண்ணிடம் தானமாக பெற்ற கருப்பை மூலம் குழந்தை பேறு அடைந்துள்ளனர். அதில் ஜெனீபர் 2-வது நபர் ஆவார்.

