அதி­காரப் பகிர்வு குறித்து இந்தியாவில் பேசவில்லை – தினேஸ்

193 0

தேசிய பிரச்­சி­னைக்­கான அதி­காரப் பகிர்வு விவ­காரம் குறித்து இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துரையாடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ள வெளிவி­வ­கார அமைச்சர்  தினேஸ் குணவர்தன அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்­போது இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான மீனவர் பிரச்சினை பட­குகள் விடு­விப்பு விவ­காரம் போன்ற பல்­வேறு விடயங்கள் குறித்து ஆரா­யப்­பட்­டுள்ளது.

அந்த சந்­திப்­புக்கள் குறித்து தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தே இந்­தியத் தலை­வர்­க­ளு­டனான சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த சந்திப்புக்கள் ஆக்­க­பூர்­வ­மாக அமைந்­தன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் இந்த விஜயத்தின்போது, அதி­காரப் பகிர்வு குறித்து எதுவும் பேசப்­ப­ட­வில்லை என்றும் தனது சந்­திப்­புக்கள் மற்றும் கலந்துரையாடல்கள் அனைத்தும் வெளிவிவகார அமைச்சுக்குரிய விடயதானங்களாகவே காணப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.