ஈரான் தூதுவரை சந்தித்து பேசினார் மைத்திரி!

264 0

இலங்கைக்கான ஈரான் தூதுவர் மொஹமட் சயரி அமீரானியிற்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று(வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான ஈரான் தூதுவர் சயரி அமீரானி, தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து, மீண்டும் நாடு திரும்பவுள்ள நிலையிலேயே, இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தனது பதவிக்காலத்தில் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு ஈரான் தூதுவர் மொஹமட் சயரி அமீரானி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஈரான் தூதுவர் என்ற வகையில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் தமது நன்றியைத் தெரிவித்துள்ளார்.