வவுனியாவில் விசேட ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர்!

246 0

வவுனியாவில் இன்று காலை முதல் நகர் பகுதி மற்றும் சுற்று வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

இன்று காலை 11 மணியிலிருந்து இராணுவத்தினர் வவுனியா நகர் பகுதியில் ரோந்தினை மேற்கொண்டதுடன் திடீரென வவுனியா குளக்கட்டு வீதியூடாக பூந்தோட்டத்தை நோக்கி சென்றிருந்தனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

இராணுவத்தினர் சைக்கிளிலும் ; ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதனை ; காணக்கூடியதாக இருந்தது. இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் அப்பகுதிக்கு இராணுவத்தினர் சென்றதாக தெரியவருகின்றது.