மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தகவல் தொழிநுட்ப பிரிவின் பீடாதிபதிக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தெஹிவளையில் உள்ள விடுதி ஒன்றில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து இருவர் உயிரிழந்தமை தொடர்பாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மேற்கொண்ட விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி கலந்துரையாடல் குறித்து மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தகவல் தொழிநுட்ப பிரிவிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது.
பகுப்பாய்வு அறிக்கையை பொலிஸாருக்கு சமர்ப்பிக்காமையால் நீதிமன்றத்தால் குறித்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
விடயம் தொடர்பாக நீதிமன்றத்தை தெளிவுபடுத்துவதற்காக தகவல் தொழிநுட்ப பிரிவின் பீடாதிபதியை மன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து அவருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் நீதிமன்ற அழைப்பாணையை பொருட்படுத்தாததன் காரணமாக பீடாதிபதிக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

