அரசாங்கத்தை நெறுக்கடிக்குள் உட்படுத்தும் வகையில் போலி பிரசாரத்தை பரப்பியதாக கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சுவிஸ் தூதரங்கத்தின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி ; கானியா பனிஸ்டர் பிரான்ஸ்சின் தொலைபேசி நேற்று நீதிமன்றுக்கு ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே இந்த தொலைபேசி மன்றில் ஒப்படைக்கப்பட்டது.
பிணையில் விடுவிக்கப்பட்ட கானியாவும் மன்றில் முன்னிலையாகியிருந்தார். இதன்போது கடந்த வழக்கு விசாரணைகளின் போது கூறப்பட்டதைப் போன்று சந்தேக நபரான தூதரக அதிகாரியின் தொலைபேசி மன்றில் சமர்பிக்கப்பட்டது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இரசயன பகுப்பாய்வாளரிடம் அந்த தொலைபேசியை ஒப்படைப்பதற்காக வினாதொகுதி அடங்கி அறிக்கையும் மன்றில் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை சந்தேக நபரான பெண்ணுக்கு பிணை வழங்கும் போது ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை தோறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கபடாமையினால் அது தொடர்பிலும் கட்டளை ஒன்றி கோரிய கோரிக்கையும் முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டது.
இதனை கருத்திற் கொண்ட நீதிவான் ஒவ்வொரு மாதமுல் இறுதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் குற்றப்புலனாய்வு தினைக்களத்தின் மனிதப் படுகொலை கொலை விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறும் பினை நிபந்தனையாக சேர்த்து உத்தரவிட்டார்.

