அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் இளவரசர் ஹாரி, மேகன் மெர்கல்

407 0

பிரிட்டன் அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளில் இருந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மெர்கல் விலகுவதாக தெரிவித்துள்ளனர்.பிரிட்டன் அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளில் இருந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மெர்கல் விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட பிளவை உணர்த்தும் வகையில் புது ஆண்டில் ஆச்சரியமான முடிவை இளவரசர் ஹாரி அறிவித்திருக்கிறார்.
அதன்படி, பிரிட்டன் அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளிலிருந்து ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகுகின்றனர் என்பதே அது.
இதுதொடர்பாக இளவரசர் ஹாரி வெளியிட்ட அறிவிப்பில், பல மாத ஆலோசனைகளுக்குப் பிறகு முன்னேற்றத்திற்கான புதிய பாத்திரத்தை இப்புதிய ஆண்டில் துவக்க இருக்கிறோம். தற்போது இங்கிலாந்து, வட அமெரிக்காவில் எங்கள் நேரத்தை செலவிட இருக்கிறோம். பதவியிலிருந்து விலகினாலும் இங்கிலாந்து ராணிக்கு செய்யவேண்டிய எங்கள் பணியை தொடர்ந்து செய்வோம். நிதி சார்ந்து சுதந்திரமாக செயல்பட இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹாரியின் இம்முடிவுக்கு இங்கிலாந்து மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.