எதிர்வரும் 18 மணி நேரத்திற்கு கடும் மழை

290 0

ui-300x214எதிர்வரும் 18 மணிநேரத்திற்கு இலங்கையில் பல பாகங்களில் கடும் மழை எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி தெற்கு மேல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதுபோல் கொழும்பில் இருந்து காலி ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 80 கிலோமீட்டர் வரையில் உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கடற்துறை சார்த்தவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தெற்கு மத்திய மேல் சப்ரகமுவ மாகாணங்களில் இன்றைய தினம் கடும் மழை எதிர்பார்க்கப்படுவதமாகவும் அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே தற்பொது நிலவும் அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுச்சாலையின் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்திச் செல்லுமாறும் அதிகார சபையின் பணிப்பாளர் எஸ்.ஒபநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் அதிவேக நெடுஞ்சாலையின் வெளியேறும் வீதியிலும் இவ்வாறான பாதிப்புகள் காணப்படுவதாகல் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.