தன்னை கொலை செய்ய சதித்திட்டம் -மஹிந்தனந்த

280 0

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் இணைந்து தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் வெளியான குரல் பதிவு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே முறைபாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.

இன்று (08) மாலை பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாட்டை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோரின் குரல் பதிவின் ஊடாக தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பது தெளிவாக தெரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஆயுத பயிற்சி எடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் முறைபாடு ஒன்றை செய்துள்ளதாகவும் அது தொடர்பில் பூரண விசாரணை நடத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.