நந்தனத்தில் 9-ந்தேதி புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

245 0

சென்னை நந்தனத்தில் வருகிற 9-ந்தேதி புத்தக கண்காட்சி தொடங்குகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கி வைக்கிறார்.சென்னை நந்தனத்தில் வருகிற 9-ந்தேதி (வியாழன்) புத்தக கண்காட்சி தொடங்குகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கி வைக்கிறார்.

புத்தக கண்காட்சியின் நுழைவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும். ஆனால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசம். இந்த சலுகையை பெற மாணவர்கள் அவர்கள் படிக்கும் நிறுவனத்தில் இருந்து அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும்.

புத்தக கண்காட்சியில் 3 ஆயிரம் சதுரடியில் கீழடி ஆய்வு கண்காட்சி மற்றும் மலர்களால் ஆன திருவள்ளுவர் சிற்பம் ஆகியவை அமைக்கப்படுகிறது.

வேலை நாட்களில் தினமும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரை கண்காட்சி நடைபெறும். விடுமுறை நாட்களில் மட்டும் காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறும்.

21-ந்தேதி கண்காட்சியின் நிறைவு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பதிப்புத் துறையில் 25 வருடங்களாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்.