ஈரான் வெளியுறவு மந்திரி அமெரிக்காவுக்குள் நுழைய தடை!

198 0

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ‌ஷாரீபுக்கு விசா வழங்க மறுத்த அரசு அவர் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதித்துள்ளது.

அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் இருநாடுகளும் தொடர்ந்து வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவில் 9-ந்தேதி நடைபெற இருக்கும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ‌ஷாரீப் பங்கேற்க இருந்தார்.இது அமெரிக்க ராணுவ நடவடிக்கை குறித்து ஈரான் தரப்பு வாதத்தை சர்வதேச சமூகத்திடம் முன்வைப்பதற்கான முதல் மற்றும் முக்கியமான வாய்ப்பாக பார்க்கப்பட்டது.

எனவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தீவிரம் காட்டிய ஜாவத் ‌ஷாரீப் விசா வழங்குமாறு அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த அமெரிக்க அரசு அவர் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதித்தது. ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெசை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஜாவத் ‌ஷாரீப்பை நாட்டுக்குள் நுழைய அமெரிக்கா அனுமதிக்காது என கூறினார்.