இலஞ்சம் பெறுவோரை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை

329 0

அரசாங்க நிறுவனங்களில் சேவைகளைப்  பெற்றுக் கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் இலஞ்சம் பெறும் நபர்களை, அதே இடத்தில் வைத்துக் கைது செய்வதற்கான  விசேட நடவடிக்கைகளை  அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

மேல் மாகாணத்தைக் கேந்திரமாகக் கொண்டு இதற்கென தனியான  பொலிஸ் பிரிவு ஒன்று செயற்பட்டு வருவதுடன், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் இதன் தலைமை அதிகாரியாகச் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைவாகச் செயற்படும் இந்த விசேட பிரிவில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இலஞ்சம் பெற்றுவருவதற்கான குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படும் பல நிறுவனங்கள் தொடர்பில், அரசாங்கத்துக்கு தற்போது தகவல்கள் கிடைத்துள்ளதைக் கவனத்தில் கொண்டே, இவ்விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.