மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 4 தொழிலாளிகள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் இன்று காலை 11:30 மணியளவில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குளவி கொட்டுக்கு இலக்காகியவர்களில் மூவர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

