ஹிக்கடுவ பகுதியில் வைத்து வீசா அனுமதிப்பத்திரம் இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த சுவிட்சர்லாந்து நாட்டு பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (05) இரவு 11.30 மணியளவில் ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்லகொட பகுதியில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி இந்நாட்டில் தங்கி இருந்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

