உள்நாட்டுப்போரை வெற்றி கொண்ட அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சிறுபான்மை மக்களின் மனங்களை வெற்றி கொள்ள முடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் ஆற்றிய அக்கிராசன உரையின்போது, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாத அரசியலை முன்னெடுத்தவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களை என்றும் மதிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் இறையான்மையை பாதுகாக்க முடியுமென குறிப்பிட்டிருந்தார்.
இந்த விடயம் தொடர்பாக தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கயைில், மஹிந்தவிற்கு இனங்களுக்கிடையில் ஐக்கியத்தினை கட்டியெழுப்ப முடிந்திருக்கவில்லை என்பதாலேயே அவருடைய ஆட்சி சரிந்தது என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் அவருடைய சகோதரராக இருக்கும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவாவது சிறுபான்மை மக்களின் மனங்களை வெற்றி பெறுவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாறாக பெரும்பான்மையின சிந்தனையில் செயற்பட விழைவதானது இனங்களுக்கு இடையிலான விரிசல்களை மேலும் அதிகரிக்கச் செய்யும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

