ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் – டிரம்ப் எச்சரிக்கை

229 0

ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களின்மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரானின் 2-வது சக்திவாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் அவருடன் ஈராக் துணை ராணுவ தளபதி அபு மஹதி அல் முகந்திஸ் மற்றும் 6 பேரும் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவை பழி தீர்ப்போம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது. மேலும், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க ராணுவ முகாமை குறிவைத்து ஈரான் ராணுவத்தின் காத்ஸ் பிரிவு இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களின்மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பதில் தாக்குதல் நடத்தும் விதமாக அமெரிக்காவின் சொத்துகளைத் தாக்கப்போவதாக ஈரான் பேசிக் கொண்டிருக்கிறது. அப்படித் தாக்கப்படும்பட்சத்தில் எங்களது எதிர்வினை மிக மோசமானதாக இருக்கும். ஈரானின் முக்கிய 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என பதிவிட்டுள்ளார்.