பால்மா விலை அதிகரிக்கப்பட மாட்டாது

244 0

29610எந்தவொரு காரணத்திற்காகவும் பால் மாவின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த முதலாம் திகதி முதல் வெட் வரி சீர்த்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், வெட் வரி அதிகரிப்பின் காரணமாக இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பால்மாவினது விலையும் அதிகரிக்கப்படமாட்டாது என நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 400 கிராம் பால் மா பக்கெட் ஒன்றின் விலை 325 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பால் மா பக்கெட் ஒன்றின் விலை 810 ரூபாவாகவும், நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் எந்தவித் மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.