கொஸ்லாந்த பகுதியில் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
இதன் போது தாயுடன் குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு குழந்தை தெய்வாதீனமாக உயர் தப்பியுள்ளது.
சம்பவத்தில் டிலானி மஞ்சுலா என்ற 20 வயதான தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு தனது மகள் குழந்தைகளுடன் தூக்கிட்டதை கண்ட உயிரிழந்த பெண்ணின் தாய் அவர்களை மீட்டு உடனடியாக வைத்திசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இவ்வாறு கொண்டு சென்ற போதும் டிலானி மஞ்சுலா என்ற தாயும் அவரின் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.
எனினும் மூன்றரை வயதான மற்றுமொரு குழந்தை உயிர் தப்பியுள்ளது.
உயிர் தப்பிய குழந்தை சிறந்த தேக ஆரோக்கியதுடன் இருக்கிறது.
சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளது.
இந்த தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், கொஸ்லாந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளளனர்.

