அரசாங்க பேச்சாளர்களாக கெஹேலிய , மஹிந்தானந்த நியமனம்

277 0

அரசாங்க  ஊடக  பேச்சாளர்களாக இராஜாங்க அமைச்சர்களான கெஹேலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 2020.01.02ம்  திகதி ஜனாதபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க  தகவல் திணைக்களத்தில் இடம் பெற்றது.

இச்சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.