தவறு இழைத்தவர்கள் மறைந்து செயற்பட முடியாது – நாமல்

299 0

தவறு இழைத்தவர்கள் மறைந்து செயற்பட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தவறு இழைத்தவர்கள் மறைந்து செயற்படுவதற்கு தற்போதைய அரசாங்கத்தில் ஒரு போதும் இடமளிக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன ஆட்சியில் இருந்த போது உண்மைக்கு புறம்பான விடயங்களை முன்வைத்திருந்ததாகவும் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அத்துடன், தற்போது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்ற நிலையில் அவர் மீண்டும் போலியான தகவல்களை வெளியிடுவதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.