ரஷியாவில் 20 ஆண்டுகளாக பதவியில் நீடிக்கும் புதின்

212 0

ரஷ்யாவில் 20 ஆண்டுகளாக அதிபர் அல்லது பிரதமர் பதவிகளில் புதின் தொடர்ந்து நீடித்து எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார்.

1999-ம் ஆண்டு ரஷ்யா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் உளவு அமைப்பில் விளாடிமிர் புதின் பணியாற்றினார். 1999-ம் ஆண்டு ரஷ்யாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அப்போதைய அதிபர் போரிஸ் எல்ட்சின், பொறுப்பு பிரதமராக புதினை நியமனம் செய்தார்.

அதன்பின் அதிபர் பொறுப்பை போரிஸ் எல்ட்சின் 1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி ராஜினாமா செய்தார். அப்போது பொறுப்பு அதிபராக விளாடிமிர் புதினை நியமித்தார்.

அப்போது கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்வெளி தாக்குதலை புதின் நடத்தினார். இதனால் அவர் ரஷ்ய மக்களிடம் பெரும் புகழ் பெற்றார்.

அன்றுமுதல் புதின் ரஷ்யாவில் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய 2 பதவிகளில் ஏதாவது ஒன்றை வகித்தபடி தன்னை அரசியலில் நிலை நிறுத்தி வந்துகொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் புதின் அபாரவெற்றி பெற்றார். அவர் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருப்பார். ரஷ்ய நாட்டு அரசாங்கத்தை தனது கை விரல் நுனியில் வைத்திருக்கும் புதின் இன்று தனது அரசியல் பயணத்தின் 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

அவர் 20 ஆண்டுகளாக அதிபர் அல்லது பிரதமர் பதவிகளில் தொடர்ந்து நீடித்து எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்.

புதின் மீது பல்வேறு சர்சைகள் கூறப்பட்டாலும் அவர் ரஷ்யாவில் சக்தி வாய்ந்த தலைவராகவே இருந்து வருகிறார்.