முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளிநாடு சென்றால் மீண்டும் அவரை அழைத்து வருவதில் சிக்கல் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதன் பின் அவர் மறைந்து இருந்த விதம் மற்றும் முன்பிணை பெற்றுக் கொள்ள முயற்சி செய்த விதம் என்பவற்றை கவனத்திற் கொள்ளும் போது அவர் சிங்கப்பூர் பயணித்தால் திரும்பி வருவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளா்.
6 வாரங்களுக்கு முன் சுகாதார அமைச்சராக இருந்த அவர், தனக்கு அரசாங்க வைத்தியசாலைகள் மீது நம்பிக்கை இல்லாமல் தனியார் வைத்தியசாலைக்கு செல்வாராயின், இலங்கையில் மருத்துவம் செய்ய முடியாது சிங்கபூரிற்கு தான் செல்வேன் என தெரிவிப்பாராயின் வைத்திய துறை தொடர்பில் யாருக்கு நம்பிக்கை இருக்கும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

