ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக செயற்படும் சபாநாயகர் கரு ஜயசூரியவை மக்கள் பொதுத்தேர்தலின் ஊடாக புறக்கணிப்பார்கள். கடந்த அரசாங்கத்தில் எதிரணிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளின் போது பாராளுமன்ற உறுப்பினரது சிறப்புரிமை மீறப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என கிராமிய அபிவிருத்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்றத்தின் அனைத்து அதிகாரங்களும், பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளும், பாதுகாப்பும் சபாநாயகரின் வசமே காணப்படும். ஆளும் மற்றும் எதிர்த் தரப்பினருக்கு சார்பாகவும். எதிராகவும் செயற்படாமல் சபாநாயகர் பதவிக்கு ஏற்ற வகையில் நடுநிலையாக செயற்பட வேண்டும். ஆனால் 2015ஆம் ஆண்டுக்கு பிறகு சபாநாயகர் முழுமையாக ஒரு கட்சிக்கு மாத்திரம் ஆதரவாகவே செயற்படுகின்றார். அதனை அவர் பல சம்பவங்களின் ஊடாக நிரூபித்து காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் முழுமையாக மக்களின் அரசியல் தீர்மானம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது இடைக்கால அரசாங்கம் ஆட்சியில் உள்ள நிலையில் சபாநாயகர் இன்று ஐக்கிய தேசிய கட்சிக்கு மாத்திரம் சுயாதீனமாக செயற்படுகின்றார். இவரது ஒருதலைப்பட்சமான செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பொதுத்தேர்தலில் இவரையும் மக்கள் அரசியலில் இருந்து புறக்கணிப்பார்கள்.
மத்திய வங்கியின் பினைமுறி மோசடி குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2018.12.31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரசாங்கத்தினால் இடம் பெற்றதாக குறிப்பிடப்படும் நிதி மற்றும் ஏனைய அரச வள மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் ஏப்ரல் 21தின குண்டுத்தாக்குதல் குறித்து ஆராயும் விசாரணை ஆணைக்குழுவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.
ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்படவில்லை, விசாரணை நடவடிக்கைகளுக்கு அரசியல் அழுத்தம் பிரயோகிக்கப்படவுமில்லை. அனைத்து ஆணைக்குழுவின் செயற்படுகாலமும் நீடிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுயாதீன விசாரணைகளின் ஊடாக பலர் கைது செய்யப்படலாம். இதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுவது எதிர்த் தரப்பின் பலவீனமாகவே கருத முடியும்.
அரசியல் பழிவாங்கலை இலகுவான முறையில் முன்னெடுத்து செல்வதற்கு கடந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், நிதி குற்றப்புலனாய்வு பிரிவு ஆகியவை குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும். குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு பிரத்தியேகமாக ஒரு தாபனத்தை தோற்றுவிக்க வேண்டிய தேவை கிடையாது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட் டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங் குவது தொடர்பில் அரசாங்கம் உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தி யாவசிய பொருட்களின் விலையேற்றத்தி ற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. எவ்வாறு இருப்பினும் ஜனவரி மாதம் தொடக்கம் அத்தியாவ சிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைவடையும்.

