எதிர்க்கட்சி வரிசையில் அமரும் குமார வெல்கம

265 0

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளமையினால் அதற்கு ஏற்றவாறு ஆசனத்தை ஒதுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம  கடிதம் மூலம் கோரியுள்ளார்.

குறித்த கோரிக்கைக்கமைய  நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு எதிர்க்கட்சி வரிசையில் ஆசன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் முன்வரிசையின் எட்டாவது ஆசனம் ஜனாதிபதிக்கும் 7ஆவது ஆசனம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் நாடாளுமன்ற சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சி பிரதம கொறடா ஆகிய பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின்னர், ஆளும் கட்சியின் முன்வரிசையின் ஆறாவது ஆசனம் சபை முதல்வருக்கும் 5ஆவது ஆசனம் ஆளும் கட்சி பிரதம கொறடாவுக்கும் ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

இதேபோன்று எதிர்க்கட்சித் தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள சஜித் பிரேமதாசவுக்கு சபையின் முன்வரிசையில் எட்டாவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அதற்கு அடுத்தபடியாக இருக்கும் 7ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.