ஜனாதிபதியின் ஆலோசகர் எனக் கூறி அதிபரை அச்சுறுத்திய சந்தேகநபர் கைது

288 0

ஜனாதிபதியின்  ஆலோசகர்  எனக் கூறி  மொரட்டுவையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் அதிபரை அச்சுறுத்திய  சந்தேகநபரை  பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரைக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

போலியான முறையில் அச்சுறுத்தல் விடுத்துத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கீழ் அவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர் இன்று மொரட்டுவை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்த நடடி வக்கை மேற்கொள்ளப் படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.