பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து சுமார் 600 வெளிநாட்டு முஸ்லிம்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக ஹர்தீப் சிங் புரி குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை, மத்திய வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரியாக பதவி வகிப்பவர் அளிக்கப்பட்டுள்ளதாக ஹர்தீப் சிங் புரி.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியுட்டுள்ள பதிவில், ‘திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் மூலம் மனித உரிமைகள் தொடர்பான உறுதிப்பாட்டில் இருந்து விலகவில்லை. மாறாக, மனிதாபிமானத்தின் மாண்புகளை இந்தியா உயர்த்தி பிடித்துள்ளது.
நவீன இந்தியாவில் திபெத், இலங்கை, உகாண்டா, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் இருந்து ஒடுக்கப்பட்டவர்களாக இந்தியாவுக்கு வரும் முஸ்லிம்கள் இங்கு குடியுரிமைக்காக விண்ணப்பிக்க கூடாது என திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தில் கூறப்படவில்லை.
இந்த நாடுகளை சேர்ந்த சுமார் 600 பேருக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு குடியுரிமை அளித்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

