சிங்களத்தில் தேசிய கீதம் – இலங்கை முடிவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

331 0

இலங்கையின் சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்க இலங்கை அரசு முடிவெடுத்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

இலங்கையின் சுதந்திர தினத்தன்று, சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்க இலங்கை அரசு முடிவெடுத்திருப்பது, ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது.

இலங்கை அரசின் இத்தகைய பேரினவாதப் போக்கு, இலங்கையில் தமிழர்களை மேலும் தனிமைப்படுத்தவே வழி வகுக்கும்.

எனவே, பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, தமிழர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.