பெரும்போகத்தின் போது அறுவடை செய்யப்படும் நெல்லின் பெரும் பகுதியை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, நெல் கொள்வனவு சபையின் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சின் விவசாய மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கை தொடர்பான மேலதிக செயலாளர் அஜந்த சில்வா தெரிவித்தார்.
நெல் கொள்வனவு சபையிடம் உள்ள களஞ்சியசாலைகள் தற்போது சுத்தப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

