முச்சக்கர வண்டி கட்டணக் குறைப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு

213 0

முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை குறைக்க சுயதொழில் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த இத் தீர்மானம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் செயற்படுத்ப்படவுள்ளதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் 1 கிலோ மீற்றருக்கான கட்டணத்தை 10 ரூபாயாலும், அடுத்த கிலோமீற்றர் கட்டணத்தை 5 ரூபாயாலும் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் சுனில் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் புதிய வரிச் சலுகைகள் காரணமாக முச்சக்கர வண்டி உதிரி பாகங்கள் திடீரென வீழ்ச்சியடைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

பல முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் முதல் ஒரு கிலோ மீற்றருக்கு 60 முதல் இரண்டாவது கிலோமீட்டருக்கு 45 ரூபாய் எனவும் அறவிடுகின்றனர். எனவே முதல் ஒரு கிலோ மீற்றருக்கு 50 ரூபாயை அறவிடவும் இரண்டாவது கிலோமீற்றர் கட்டணத்தை 45 இல் இருந்து 40 ரூபாயாகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுனில் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.