யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கி கேரள கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் நேற்று காலை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த நபரொருவர் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இறங்கிச்சென்றுள்ளார்,
குறித்த நபர் மீது சந்தேகம் கொண்ட வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினர் அவர் மீது சோதனைகளை மேற்கொண்ட போது அவரது உடமையில் கேரள கஞ்சா இருப்பதனை அவதானித்தனர்.
அவரை கைதுசெய்த பொலிசார் அவரிடமிருந்து 2 கிலோகிராம் நிறையுடைய கஞ்சாவினை மீட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர் அனுராதபுரம் பகுதியை சேர்ந்தவர் என்றும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

