மலையக ரயில் சேவை பாதிப்பு

294 0

மலையக ரயில் பாதையில் பண்டாரவளை மற்றும் தியதலாவ ரயில் நிலையத்திற்கு இடையில் ஓபோடெல்ல ரயில் கடவைக்கு அருகாமையில் இன்று (20) மண் மேடு சரிந்து விழந்துள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவததின் காரணமாக மலையக ரயில் சேவை முழுமையாக தடைப்பட்டுள்ளது. இதனால் நேற்று (19) இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் தியதலாவ ரயில் நிலையத்தில் இன்று காலை நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பதுளை ரயில் நிலையத்தில் இருந்த கொழும்பு கோட்டை நோக்கி புறப்பட்ட ரயில் பண்டாரவளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரயில்வே திணைக்கள ஊழியர்கள், தியதலாவ இராணுவ முகாம் வீரர்கள், பண்டாரவளை பொலிஸார் ஆகியோர் இணைந்து பாதையை வழமை நிலைக்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.