முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமையானது எந்த விதத்திலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை இல்லை என அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ரிடிகல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
விபத்து சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தொடர்பு பட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் போது அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

