சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகளால் இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் குறித்து சுவிஸ் தூதுவருக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

