இந்திய கடற்படை தளபதி இலங்கை விஜயம்

256 0

இந்திய கடற்படை தளபதி அத்மிரல் கரம்பீர் சிங் 4 நாட்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்தார். இலங்கை – இந்திய இருதரப்பு கடல்சார் உறவுகளை வலுப்படுத்துவதே இவரது விஜயத்தின் நோக்கமாகும்.

இந்திய கடற்படை தளபதி அத்மிரல் கரம்பீர் சிங் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் கே.கே.வி.பி.எச்.டி சில்வா உட்பட பல சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் இலங்கை கடற்படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட இலங்கை கடற்படை முகாமைத்துவ சபையையும் இந்திய கடற்படை தளபதி சந்திக்கவுள்ளார்.

இலங்கை கடற்படையின் 60 ஆவது பிரிவில் பயிற்சியை முடித்துக் கொண்ட புதிய கடற்படை வீரர்களை உள்வாங்கும் நிகழ்வில் திருகோணமலையில் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிகழ்விற்கு பிரதம விருந்தினராகவும் இந்திய கடற்படை தளபதி கலந்து கொள்ளவுள்ளார்.

இந்து மகா சமுத்திர கடற்படை செயலரங்கில் இலங்கை கடற்படையும் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை – இந்திய கடற்படைக்கிடையே அதிகாரிகள் சந்திப்பு ,வருடாந்த பாதுகாப்பு பேச்சுவார்த்தை , போர்க்கப்பல்கள் துறைமுக வருகை,  பயிற்சி நடவடிக்கைகள் என்பவும் முறையாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.