கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்கவை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது அவரை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்றையதினம் கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைத்து வரப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் கொழும்பு தலைமை நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டபேதே அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று மீண்டும் அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

