குளவி கொட்டுக்கு இலக்காகிய 15 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

253 0

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கொட்டியாகலை மேற்பிரிவு தோட்ட 03ம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (18) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தேயிலை மலையில் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கோண்டிருந்த வேளை மரத்தில் இருந்த குளவி கூடு காற்று விசியதன் காரணமாக கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாகவும் இதில் பெண் தொழிலாளர்கள் 13 பேரும் ஆண்கள் 02 பேர் உள்ளடங்களாக மொத்தம் 15 பேர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதோடு நான்கு பெண் தொழிலாளர்களுக்கு குளவி கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் குறித்து அச்சமடைய தேவையில்லையென வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.