ஐ.தே.கவின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை – மயந்த திஸநாயக்க

67 0

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் குறித்து ஆராயும் குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தலதா அத்துகோரல ஆகியோர் விலகியுள்ளமை வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி இரண்டு உறுப்பினர்களுக்கு மாத்திரம் மட்டுபடுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.