தேசத்தின் குரலே பாலா அண்ணா!

798 0

தமிழீழ விடுதலைப் போராட்டம் அரசியல் வடிவம் பெறவேண்டும் என்ற தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணத்திற்கு வடிவம் கொடுத்து ஈழ விடுதலைப் போாட்டத்தை இராஜதந்திர நெழிவு சுழிவுகளுக்கு அமைவாக சர்வதேச மயப்படுத்திய பிதாமகன் கலாநிதி அன்ரன் பாலசிங்கம்.

ஆயுத கலாச்சாரத்திற்குள் இருந்த விடுதலைப்புலிகளை சர்வதேச அரங்கில் ” விடுதலைப் போராளிகள்” என்ற மகுடத்த சூடவைத்த இராஜதந்திரி .

பூமிப்பந்தில் தமிழீழ தேசம் உதயமாக வேண்டிய நியதிப்பாட்டை , ஈழ தமிழ் மக்களின் வேதனையை,ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை ,,பூ கோள ரீதியாக தமிழீழத்தின் நிலைப்பாட்டை,,தமிழ் இனத்தின் வராற்றை, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை, உலக விடுதலைப் போராட்ங்களுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒப்பீட்டை சர்வதேசம் எங்கும் ஒலிக்க செய்த ஓர் அரசியல் போராளி.

தான் மட்டும் விடுதலைப் போருக்கு பங்களிக்காது தனது மனைவியையும் பணியாற்ற வைத்த மகான் கலாநிதி அன்ரன் பாலசிங்கம். அவரது மனைவி வெள்ளை இனத்தை சேர்த பெண்மணியாக இருந்த போதும் தேசங்கள் கடந்து மனித விடுதலையை நேசித்த ஒரு சீமாட்டி.

சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகள் ஒரு சமாதனப் பிரியர்கள் என்பதை நிரூபிjத்த ஒரு நடுநிலைவாதி..மக்களின் நலனுக்காக போராட்ட வடிவங்கள் மாற்றப்பட வேண்டும் என்பதனை தமிழீழ தேசியத் தலைவருக்கு எடுத்துக்கூறிய மதியுரைஞர்.

விடுதலைப் போராட்ட வரலாற்றில் பேசப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தை மேசைகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை பேச்சாளராக அலங்கரித்த அரசியல் தத்துவஞானி.

இந்திய இராணுவம் தமிழீழ மண்ணணை ஆக்கிரமித்த வேளை பல சுற்றி வளைப்புகளின் போது தனது மனைவியுடன் சொல்லொண்ண துயரங்களை அனுபவித்த களப்போராளி .

தமிழீழ தேசியத் தலைவருக்கு அருகிருந்து அரசியல் போதித்த அறிஞன். தமிழீழ தேசியத் தலைவர் அழுத்தங்களை சந்திக்கும் போதெல்லாம் நகைசுவையால் தவைவரை காத்த ஒரு மருத்துவர் .

தனது உடல் நிலை உபாதையால் பிரித்தானியா சென்ற போதும் இமைப்பொழுது் எம் தேசத்தின் எண்ணணங்களி்ல் இருந்து பிரியாமல் வாழ்ந்த உத்தமர். . தேசங்கடந்த போதும் தமிழீழ தேசத்துக்காய் வாழ்ந்த தத்துவாசிரியர். இறுதிவரை விடுதலைப் புலிகளின் அரசியல் ஆன்மாவாக அவரது குரல் ஒலித்தது.

தமிழீழத் தேசியத் தலைவரின் குரலாக வாழ்ந்த கலாநிதி அன்ரன் பாலசிங்கத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “தேசத்தின் குரல்” என்ற உயரிய விருது வழங்கி கௌரவித்தார்.

தமிழீழ தேசத்திற்கு இவரின் இழப்பு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. “இயற்கை வெற்றிடங்களை விட்டு வைப்பதில்லை” என்பதற் கு அமையாக இளைய சந்ததியில் இருந்து பல அரசியல் ஆலோசகர்களும் தத்துவாசிரியருர்களும் வருவார்கள் அவர்கள் தமிழீனத்தை வாழ வைப்பார்கள்.