கோப் குழு முன்னெடுத்த விசாரணைகளை விட்ட இடத்திலிருந்து தொடர முடியும் – சுனில் ஹந்துநெத்தி

563 0

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரம் குறித்து முன்னைய கோப்குழு முன்னெடுத்த விசாரணைகளை விட்ட இடத்தில் இருந்து புதிய கோப்குழு முன்னெடுக்க முடியும் என முன்னாள் கோப்குழு தலைவர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

கடந்த காலங்களில் என் தலைமையின் கீழ் கோப் குழுவின் நடவடிக்கைகள் ஆரோக்கியமான வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள பல நிறுவனங்களை கோப் குழு முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளோம்.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் குறித்த அறிக்கைகள் கோப் குழுவிடம் முழுமையாக உள்ளது. அது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போது கோப் குழுவை கலைத்துள்ள நிலையில் மீண்டும் புதிதாக மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்து ஆராய வேண்டிய அவசியம் இல்லை.

நாம் விட்ட இடத்தில் இருந்து புதிய கோப் குழு விசாரணைகளை முன்னெடுக்க முடியும். அது மட்டும் அல்ல கோப் குழு மாத்திரம் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. நிதி அமைச்சர் இந்த அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என்றும் கூறினார்.