கல்விப் பொதுத்தராதர பத்திர சாதரணதரப் பரீட்சை இன்று (12) நிறைவு பெறுகிறது.
பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் அமைதியான முறையில் பரீட்சை நிலையங்களிலிருந்து வௌியேற வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், அமைதியற்ற சூழலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் பரீட்சார்த்திகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

