கடந்த அரசாங்கத்தால் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ், மாத்தளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியிகளில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களில் பொருத்தப்பட்டிருந்த பெயர்ப்பலகைகள் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளதாக, மாத்தளை பிரதே சபையின் எதிர்க்கட்சித் தலைவர் காமினி கொஸ்தா தெரிவித்தார்.
மாத்தளை பிரதேச செயலகப் பிரிவின் பாராவத்த, தும்கலவத்த, படிவிட்ட, கொட்டுவேகெதர உள்ளிட்ட பிரதேசங்களில் பொருத்தப்பட்டிருந் பெயர்ப்பலகைகளே உடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

